காதலியை பார்க்க லீவ் கேட்ட ஊழியர்…. நேர்மையைப் பாராட்டி மேலதிகாரி செய்த நெகிழ்ச்சி செயல்…!!

By Soundarya on மார்கழி 17, 2025

Spread the love

பொதுவாக அலுவலகங்களில் விடுமுறை எடுக்க உடல்நிலை சரிமில்லை என்றோ அல்லது குடும்ப விசேஷம் என்றோ பொய் காரணங்களைச் சொல்லும் ஊழியர்களுக்கு மத்தியில், தனது நேர்மையான காரணத்தால் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஒரு ஊழியர்.  தனது காதலி வெளியூருக்குச் செல்வதாகவும், அவர் திரும்பி வர ஒரு மாதமாகும் என்பதால், நாளை ஒருநாள் அவருடன் நேரம் செலவிட விரும்புவதாகவும் தனது மேலதிகாரிக்கு அந்த ஊழியர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

ஊழியரின் இந்த வெளிப்படையான தன்மையைக் கண்டு வியந்த மேலதிகாரி, “காதலுக்கு என்னால் ‘நோ’ சொல்ல முடியாது; உங்களின் நேர்மை எனக்குப் பிடித்துள்ளது” என்று கூறி உடனடியாக விடுமுறை வழங்கியுள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பொய்க் காரணங்களைத் தவிர்க்காமல் உண்மையைச் சொன்ன ஊழியரின் நேர்மைக்கும், அதை மனிதாபிமானத்துடன் அணுகிய மேலதிகாரிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.