2025-ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 125 புள்ளிகள் வரை குறைத்துள்ளதால், வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 7.9% – 8.2% என்ற அளவிற்கு சரிந்துள்ளன. இந்த வட்டிக்குறைப்பு கடன் வாங்கியவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாகும். வெறும் மாதத் தவணையை (EMI) மட்டும் குறைத்துக் கொள்ளாமல், கையில் உள்ள கூடுதல் பணத்தைக் கொண்டு கடனின் அசலை முன்கூட்டியே செலுத்தினால் (Pre-payment), கடன் காலத்தை விரைவாக முடிப்பதோடு லட்சக்கணக்கான ரூபாய் வட்டியையும் மிச்சப்படுத்தலாம் என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
