தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியைச் சுற்றியுள்ள 8 டாஸ்மாக் மதுபானக் கடைகளை நாளை மாலை 4 மணி வரை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி துடுப்பதி, விஜயமங்கலம், சீனாபுரம் மற்றும் சிப்காட் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 8 அரசு மதுபானக் கடைகளும் நாளை ஒருநாள் மட்டும் மாலை 4 மணிக்கு மேல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
