ஒரு முறை முதலீடு செய்தால் போதும்…! மாதந்தோறும் வட்டி வந்து கொண்டே இருக்கும்… நிலையான வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்…!!

By Devi Ramu on மார்கழி 17, 2025

Spread the love

சிறு முதலீட்டில் கைநிறைய லாபம் ஈட்ட விரும்புவோருக்குத் தபால் நிலையத்தின் மாத வருமானத் திட்டம் (MIS) ஒரு வரப்பிரசாதமாகும். இத்திட்டத்தில் ஒரே ஒரு முறை பணத்தை முதலீடு செய்தால் போதும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான வட்டி வருமானத்தைப் பெற முடியும். தற்போது இத்திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படுவதுடன், அந்தத் தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கே வந்துவிடும்.

இதில் தனிநபர் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக ரூ. 9 லட்சம் வரையிலும், மூன்று பேர் வரை இணைந்து தொடங்கும் கூட்டுக் கணக்கில் ரூ. 15 லட்சம் வரையிலும் சேமிக்கலாம். உதாரணமாக, தனிநபர் கணக்கில் 9 லட்சத்தை டெபாசிட் செய்தால், மாதம் ரூ. 5,550 வருமானமாகப் பெறலாம். ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு, நீங்கள் முதலீடு செய்த அசல் தொகை முழுமையாகத் திரும்பக் கொடுக்கப்படும்.

   

குறைந்தபட்சம் ரூ. 1,000 முதலீட்டில் கூட இக்கணக்கைத் தொடங்க முடியும் என்பதால், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இது சிறந்த சேமிப்புத் திட்டமாக உள்ளது. உங்கள் முதலீட்டிற்கு மத்திய அரசின் முழுப் பாதுகாப்பு இருப்பதால், பணத்தை இழக்கும் அபாயம் இன்றி நிம்மதியாக இருக்கலாம். வழக்கமான மாத வருமானத்தை எதிர்பார்க்கும் முதியவர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.