நமது வீடுகளில் பயன்படுத்தப்படும் ஃப்ரிட்ஜின் கதவுப் பகுதியில் சில குறிப்பிட்ட பொருட்களைச் சேமிப்பது அவற்றின் தரத்தைக் குறைப்பதோடு உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும். ஃப்ரிட்ஜ் கதவை நாம் அடிக்கடி திறந்து மூடுவதால், அந்தப் பகுதியில் வெப்பநிலை சீராக இருக்காது; இது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
குறிப்பாக, முட்டைகளை கதவுப் பகுதியில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் வெப்ப மாற்றங்களால் அவை விரைவில் கெட்டுப்போகக்கூடும். அதேபோல், சமைக்காத இறைச்சி வகைகளை அங்கு வைத்தால், வெப்பநிலை மாறுபாட்டால் தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பக்கவாட்டுப் பகுதியில் பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களை வைப்பதையும் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் கதவு திறக்கப்படும்போது படும் வெப்பக் காற்று இவற்றைப் விரைவில் புளிக்கச் செய்துவிடும். சீஸ் வகைகளும், குறிப்பாக மென்மையான சீஸ்கள், சீரான குளிர்ச்சி கிடைக்காமல் போனால் அவற்றின் சுவை மாறி பாழாகிவிடும்.
ஃப்ரஷ் ஜூஸ் வகைகளை அங்கு வைக்கும்போது, அவை எளிதில் நுரைத்து வீணாகிவிடும். எனவே, இத்தகைய முக்கியமான உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜின் உட்புறத்தில் வெப்பநிலை மாறாத பகுதிகளில் அடுக்குவதே சிறந்தது. இதன் மூலம் உணவின் தரம் குறையாமல் நீண்ட நாட்கள் ஃப்ரஷ்ஷாக வைத்திருக்க முடியும்.
