FLASH: பாஜக முக்கிய தலைவர் மாரடைப்பால் காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!

By Soundarya on மார்கழி 16, 2025

Spread the love

ராமஜென்மபூமி இயக்கத்தின் தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான (MP) ராம்விலாஸ் வேதாந்தி (67) மாரடைப்பால் காலமானார்.அவரது இறுதிச் சடங்குகள் இன்று அயோத்தியில் நடைபெறவுள்ளன. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளில் முக்கியத் தலைவராகச் செயல்பட்டவர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார்.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் செயல் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1996 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  ராமர் கோயில் இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த தலைவரின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.