BREAKING: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு… ஞானசேகரன் மீதான குண்டாஸ் ரத்து… சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!

By Nanthini on மார்கழி 15, 2025

Spread the love

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய திமுக ஆதரவாளரான ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு பல பெண்களிடம் தவறாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது. ஞானசேகரன் மீது ஏராளமான கட்டப்பஞ்சாயத்து, திருட்டு உள்ளிட்ட புகார்கள் வெளியானது. இதனால் அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டது எதிர்த்து அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் ஞானசேகருக்கு குண்டாஸ் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.