BREAKING: பனையூர் விஜய் அலுவலகத்தில் பரபரப்பு… சற்றுமுன் அதிர்ச்சி..!!

By Soundarya on மார்கழி 14, 2025

Spread the love

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சில உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் பலரிடம் கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றியதாகப் புகார் எழுந்துள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் புகைப்படத்தை பேனரில் பயன்படுத்தியதற்காக ஒரு வட்டச் செயலாளரை கட்சியில் இருந்து நீக்கிய மாவட்டச் செயலாளரை மாற்ற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பியுள்ளனர். கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.