கண்ணை மறைத்த ரூ.1.8 கோடி இன்சூரன்ஸ் தொகை… குடும்பத்தோடு சேர்ந்து மாமனாரை கொலை செய்த மருமகன்… சினிமாவையே மிஞ்சும் திடுக்கிடும் சம்பவம்…!

By Nanthini on மார்கழி 14, 2025

Spread the love

ஆந்திர மாநிலத்தில் உள்ள கொத்த பள்ளி கிராமத்தை சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் கடந்த டிசம்பர் ஒன்பதாம் தேதி சாலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாராயண மூர்த்தியின் உடல் மீது இறந்த காயங்கள் கொலைக்கான சாத்திய கூறுகளுடன் இருப்பதால் இந்த விபத்துக்கு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதனிடையே நாராயணமூர்த்தியின் உடலை அவருடைய மருமகன் அன்னவரம் பெற்றுக்கொண்டு அவருடைய சொந்த கிராமத்தில் இறுதி சடங்குகளை நடத்தி முடித்து காரியங்களை எல்லாம் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நாராயண மூர்த்தியின் பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடிக்கு பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு எடுத்திருந்தது தெரிய வந்தது. இன்சூரன்ஸ் பணத்திற்காக நாராயணசாமியை அன்னவரம் கொலை செய்திருக்கக் கூடாது என்ற சந்தேகம் போலீசாருக்கு வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் காப்பீட்டு பணத்திற்காக நாராயணசாமியை கொலை செய்து விபத்து போல சித்தரித்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

   

இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த குடும்பத்தினரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மொத்தம் 1.08 கோடி இன்சூரன்ஸ் தொகைக்காக இந்த கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. குடும்பத்தினர் சேர்ந்து மாமனாரை மது விருந்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நாராயணமூர்த்தி போதையில் இருந்தபோது மற்ற குற்றவாளிகளுடன் சேர்ந்து அன்னவரம் இரும்புராடால் தாக்கியுள்ளார். பிறகு நாராயண மூர்த்தி உயிர் இழந்ததும் அவருடைய உடலை கிராமத்திற்கு அருகில் உள்ள தெரு விளக்குகள் இல்லாத சாலையில் கொண்டு சென்று வீசி உள்ளனர். தற்போது அவர்களை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது