இசையமைப்பாளர் டி. இமான் தனது இசையமைப்பாளர் பயணத்தில் ‘கும்கி’ திரைப்படத்தின் ‘ஒன்னும் புரியல’ பாடலுக்குக் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து நெகிழ்ச்சியுடன் உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘கும்கி’ திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆன பின்னரும், ‘ஒன்னும் புரியல’ (Onnum Puriyala) பாடல் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்று கூறியுள்ளார்.
13 years of #Kumki 🐘
Still overwhelmed by the love every time someone asks for “Onnum Puriyala” ❤️Visited a textile store at Coimbatore recently, and the staff and customers there surprised me by requesting this song with so much affection… couldn’t resist singing it for them… pic.twitter.com/I56Av6H14q
— D.IMMAN (@immancomposer) December 14, 2025
கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு அவர் சென்றபோது, அங்கிருந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அந்தப் பாடலைப் பாடுமாறு மிகுந்த பாசத்துடன் கேட்டுக்கொண்ட நிகழ்வு அவரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுபோன்ற எதிர்பாராத தருணங்களும், மக்களின் அன்பும்தான் இசையானது ஒரு “வரம்” என்பதை அவருக்கு மீண்டும் நினைவூட்டுகின்றன என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
