பிஎஃப் திட்டத்தில் பயன்பெறும் ஊழியர் இறந்து விட்டால் அவரது குடும்பப் பென்ஷன் முதல் மனைவி கிடைக்குமா அல்லது 2வது மனைவிக்கு கிடைக்குமா அல்லது இருவருக்குமே கிடைக்குமா என்ற குழப்பம் இருந்து வருகிறது. 2 மனைவிகள் இருந்தால் குடும்ப ஊதியம் யாருக்கு செல்லும் என்ற கேள்வியும் இருக்கிறது சட்டப்படி முதல் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் முதலில் கிடைக்கும். முதல் மனைவி இறந்துவிட்டால் மட்டுமே 2வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இரண்டு திருமணமும் சட்டப்படி செல்லும்பட்சத்திலும் ஓய்வூதியம் ஒரே நேரத்தில் இருவருக்கும் வழங்கப்பட மாட்டாது.
இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெளிவான விதிகளை கொண்டு வந்துள்ளது. ஒரு உறுப்பினருக்கு இரண்டு மனைவிகள் இருக்கும்போது குடும்ப ஊதியம் விதிமுறைப்படி முதலில் முதல் மனைவிக்கும் அவர் மறைவுக்கு பிறகு 2வது மனைவிக்கும் வழங்கப்படும். ஆனால் 2வது மனைவி சட்டப்படி திருமணம் செய்திருந்தால் மட்டுமே அவருக்கு ஓய்வூதியம் பெறும் உரிமை உண்டு. ஊழியரின் 2 மனைவிகளும் உயிரோடு இருந்தால் முதல் மனைவிக்கு முதலில் ஓய்வூதியம் கிடைக்கும். முதல் மனைவி இறந்த பிறகு 2வது மனைவிக்கு கிடைக்கும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
