அசாம் மாநிலத்தில் சமையல் சிலிண்டர்கள் 300 ரூபாய்க்கு கிடைக்கும் என அந்த மாநிலத்தின் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, அசாமில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு 300 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் என்பது இனி கனவல்ல. அது விரைவில் நிஜமாக போகிறது. அசாம் மாநிலத்தில் விரைவில் உஜ்வாலா பயனாளிகள் மாநில அரசிடமிருந்து 250 ரூபாய் மானியம் பெறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் குறிப்பாக பெண்கள் பெரிதும் பயனடைவார்கள். அசாம் மாநிலத்தில் ஏற்கனவே குடும்பங்களின் அத்தியாவசிய செலவுகளுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கப்படுகிறது. மாநில அரசின் அறிவிப்பு கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு பெரிய நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
