பொங்கல் பரிசு எப்போது கைக்கு வரும்? இந்த முறை ரூ. 5000 கிடைக்குமா? திமுக அரசின் அறிவிப்புக்காக ஆவலாக காத்திருக்கும் மக்கள்!

By Elango on மார்கழி 12, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் எப்படியும் இந்த முறை திமுக அரசு வருகிற பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் 5000 ரூபாய் ரொக்கமாக வழங்கும் என்று பொதுமக்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் ஏற்கனவே பெரும் கடன் சுமையில் இருக்கும் தமிழக அரசு இவ்வளவு பெரிய தொகையை தருமா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2.27 கோடி ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. ரேஷன் அட்டைக்கு தலா 5000 ரூபாய் தொகை வழங்கினால் 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். அந்தளவுக்கு நிதி ஒதுக்க வாய்ப்பில்லை. அதனால் ஒரு ரேஷன் அட்டைக்கு 3000 ரூபாய் வழங்க அரசு முடிவு செய்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்காக 6600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

   

மேலும் 3000 ரூபாயுடன் ஒரு கிலோ அரிசி சர்க்கரை முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட உள்ளது. இலவச வேட்டி சேலை வழக்கம் போல வழங்கப்படுகிறது. முதலில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு பிறகு பரிசு தொகுப்பு, ரொக்கம் உள்ளிட்டவை வழங்கப்படும். கடந்த முறை ஜனவரி 3ம் தேதி டோக்கன் வழங்கப்பட்டு ஜனவரி 9ம் தேதி முதல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. அதேபோல் 2026ம் ஆண்டிலும் ஜனவரி முதல் வாரத்தில் டோக்கன் கொடுக்கப்பட்டு பரிசு தொகுப்பு வழங்க பொது விநியோகத் துறை சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.