ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை பெயர் மாற்றத்திற்கான ஆதார ஆவணமாக இருந்த பான் கார்டு இப்போது அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் இதற்கு முன்பு 5 வயது உட்பட்டோர், 5 வயதுக்கு மேற்பட்டோர் என்று 2 இரண்டு வகை ஆவணப்பட்டியல் மட்டுமே இருந்தது.
ஆனால் இது இப்போது 4 வகையான புதிய ஆவணப் பட்டியலாக மாற்றப்பட்டுள்ளது. 5 வயதுக்கு உட்பட்டோர், 5 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்டோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 4 வகையான ஆவணப் பட்டியல் என மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 18 வயது மேற்பட்டோர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்தது.
ஆனால் இனி அவர்கள் ஆதார் கார்டு பெயர் மாற்றத்திற்கு ஆவணமாக பான் கார்டை சமர்ப்பிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை டிரைவிங் லைசென்ஸ் மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டை புகைப்படத்துடன் இருக்கும் சாதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களை, சான்று ஆவணமாக இணைக்கலாம். இதனால் 18 வயது மேற்பட்டோர் ஆதார் கார்டில் பெயர்திருத்தம் செய்ய ஆவணம் வழங்க முடியாமல் கடும் நெருக்கடியை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
