சில நேரங்களில் சிலர் சமயோசிதமாக யோசித்து மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து விடுவார்கள். அப்படி ஒரு ஆட்டோ டிரைவரின் சமயோசிதமான செயல் சமூக வலைதளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக இண்டிகோ விமானங்களில் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த சூழ்நிலையில் மற்ற விமான நிறுவனங்கள் பயண கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் அது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக ஒருவர் தனது ஆட்டோவை இண்டிகோ விமானம் போல மாற்றி அமைத்து கவனம் பெற்று இருக்கிறார். அவரது ஆட்டோ ஏராளமானோர் விருப்பங்களை பெற்று கூடுதல் சவாரிகளை பெற்றுக் கொடுத்தது. அவர் ஆட்டோ இயக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலானது. இருந்தாலும் இந்த வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
