சற்றுமுன் திடீர் டுவிஸ்ட்..! திமுகவில் இணைந்தார் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார்…!!

By Soundarya on மார்கழி 11, 2025

Spread the love

விஜய்யின் முன்னாள் மேலாளரும், ‘புலி’ திரைப்படத்தின் தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார், இன்று திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். முன்னதாக, பி.டி.செல்வகுமார் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை நடத்தி வந்தார். தற்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் சேர்ந்துள்ளார்.

விஜய் தனது “தமிழக வெற்றிக் கழகம்”  கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், அவரது முன்னாள் மேலாளரான செல்வகுமார் பிரதான எதிர்க்கட்சியான திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.