வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்று (டிசம்பர் 11, 2025) இரண்டாவது நாளாகவும் விலை உயர்ந்து, முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்லறை வர்த்தகத்தில், சென்னையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,09,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.209 ஆக உள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் (செவ்வாய், புதன், வியாழன்), ஒரு கிலோ வெள்ளியின் விலை மொத்தம் ரூ.11,000 வரை உயர்ந்துள்ளது.
