2026 தேர்தலில் போட்டியிட டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று அறிவித்திருக்கிறார். டிசம்பர் 15 முதல் நாள் நண்பகல் 12:00 மணிக்கு (நல்ல நேரம்) தொடங்குகிறது. டிசம்பர் 16 முதல் 23 வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம்.
விருப்ப மனுவில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
