மீண்டும் அதிமுக ஒருங்கிணைப்பு… ஒரே போடாய் போட்ட ஒபிஎஸ்… பரபரப்பு பேட்டி…!

By Nanthini on மார்கழி 10, 2025

Spread the love

தமிழகத்தில் பல அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று கழக குரல் எழுந்து வரும் நிலையில் இன்று பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழக மற்றும் புதுச்சேரியில் இருந்து அதிமுக நிர்வாகிகள் பலரும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரிந்த தலைவர்களை சேர்ப்பதற்கான ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக அமைச்சர்கள் பலரும் ஓபிஎஸ், தினகரன், சசிகலா மற்றும் செங்கோட்டையன் போன்றவர்களை துரோகிகள் என்று கூறி வருவதால் இந்த இணைப்பு சாத்தியமில்லை என கூறப்படுகிறது. அதே சமயம் பொதுக்கூட்டத்தில் பேசிய இபிஎஸ், இந்த தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் அதிமுக ஒன்றுசேர பாஜக விரும்புவது பற்றிய கேள்விக்கு, இதனை பொதுக்குழு நடத்துபவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றும் பதிலளித்துள்ளார். ஒருங்கிணைப்பு தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என ஈபிஎஸ்-க்கு ஓபிஎஸ் டிசம்பர் 15 வரை கெடு விதித்த நிலையில் இவருடைய இந்த பதில் தற்போது அரசியலில் கவனம் பெற்றுள்ளது. மேலும் ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படவில்லை என்றால் அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.