உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த ஒரு கிளினிக்கில், 38 வயதான தலித் பெண் ஒருவர் பித்தப்பை கல் அறுவை சிகிச்சையின் போது பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின்படி, அந்த கிளினிக்கை நடத்தி வந்த சித்தப்பா மற்றும் மருமகன் இருவரும் போலி மருத்துவர்கள் ஆவர். மேலும், அவர்கள் போதையில் இருந்தபடியே, யூடியூப் videos பார்த்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு முனிஷ்ரா ராவத் என்ற அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
அவர் இறந்ததை அறிந்தவுடன், போலி மருத்துவர்கள் இருவரும் கிளினிக்கைப் பூட்டிவிட்டுத் தலைமறை ஆகிவிட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இறந்த முனிஷ்ரா ராவத்தின் கணவரான ஃபதேபகதூர் ராவத் அளித்த புகாரின் பேரில், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிளினிக்கின் உரிமையாளரான ஞான பிரகாஷ் மிஸ்ரா மற்றும் அவரது மருமகன் விவேக் மிஸ்ரா.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான விவேக் மிஸ்ரா, உண்மையில் ஒரு அரசு ஊழியர் ஆவார். இவர் அரசு ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். விவேக் மிஸ்ராவின் மறைமுக ஆதரவு மற்றும் பின்னணியில், இந்தக் கிளினிக் பல ஆண்டுகளாக எவ்வித சட்ட அனுமதியுமின்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. போலி மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த இந்த உயிரிழப்பு குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
