சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை… மாதம் ரூ.42,000 வரை சம்பளம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

By Soundarya on மார்கழி 10, 2025

Spread the love
சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-CLRI), ஒப்பந்த அடிப்படையில் 14 புராஜெக்ட் அசோசியேட் (Project Associate) மற்றும் இதர பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. CLRI (Central Leather Research Institute) பற்றிய மேலும் தகவல்களை அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.
மொத்த காலியிடங்கள்: 14

பணி நியமன வகை: ஒப்பந்த அடிப்படையிலானவை

கல்வித் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எம்.எஸ்சி., பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ. போன்ற தொடர்புடைய படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

   

மாத ஊதியம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ப மாதம் ரூ.25,000 முதல் ரூ.42,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

   

தேர்வு முறை: தகுதியான நபர்கள் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெறும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் நேரடியாகப் பங்கேற்கலாம்.

 
எழுத்துத் தேர்வு: டிசம்பர் 22

நேர்முகத் தேர்வு: டிசம்பர் 23

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு CLRI-இன் வேலைவாய்ப்புப் பகுதியைப் பார்க்கவும்.