தவெக தலைவர் விஜயின் அடுத்த கட்ட சுற்றுப்பயணம் – நாளை முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

By Elango on மார்கழி 10, 2025

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளது. பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நாளை நடக்கும் இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் அடுத்தக்கட்ட கட்சி நடவடிகைகள், குறிப்பாக மக்கள் சந்திிப்பு சுற்றுப் பயணங்கள், தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார்.

மேலும் வரும் 16ம் தேதி ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடப்பதாக இருந்த நிலையில், போலீசார் தரப்பில் இதுகுறித்து 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இரண்டு நாட்கள் கழித்து வருகிற டிசம்பர் 18ம் தேதி இந்த பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுவதாக ஏற்கனவே கட்சியின் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் கூறியிருந்தார். நாளை நடக்கும் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனைக் கூட்டத்தில், ஈரோடு பொதுக்கூட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. அதனால் முக்கிய அறிவிப்புகளை தவெக தலைமை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.