நீலகிரி மாவடத்தின் 88 புதிய கிராம ஊராட்சிகள் உருவாக்கம்; அரசாணை வெளியீடு!

By Elango on மார்கழி 10, 2025

Spread the love

ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறு சீரமைப்பு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்படி, தமிழகத்தில் புதிய ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழக அரசு இப்போது அரசாணை வெளியிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருந்த 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு, புதியதாக 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது. இதன்படி நீலகிரியில் மொத்தம் 95 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.