உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் சிவில் லைன்ஸ் பகுதியில், நவம்பர் 25 அன்று நள்ளிரவில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) ஏடிஎம் இயந்திரம் முழுவதையும் மர்மநபர்கள் கும்பல் ஒன்று வேரோடு பிடுங்கிச் சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், மக்கள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்தியது.
பர்தா அணிந்திருந்த திருடர்கள், ஏடிஎம் இயந்திரத்தை கயிற்றால் கட்டி, தங்கள் வாகனத்தில் இழுத்துச் சென்றுள்ளனர். இந்தத் துணிகரச் செயல்பாடு சிசிடிவி காட்சிகளில் பதிவாகி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கொள்ளை நடந்த நேரத்தில் ஏடிஎம்மில் சுமார் 7 லட்சம் ரூபாய் பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. பணத்தை எடுத்த பிறகு, கொள்ளையர்கள் இயந்திரத்தை அம்ரோஹாவில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் வீசி எறிந்துள்ளனர். குற்றவாளிகள் கைவரிசை காட்டுவதற்கு முன்பு, தங்கள் அடையாளங்கள் தெரியாமல் இருக்க, ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மீது கருப்பு நிற ஸ்பிரேயைப் பூசி மறைத்துள்ளனர்.
यूपी –
मुरादाबाद में 24 नवंबर को PNB की ATM मशीन उखाड़कर ले जाने वाले 5 बदमाश गिरफ्तार।
बुर्का पहने चोरों ने रस्सी का एक छोर ATM और दूसरा छोर गाड़ी से बांधा। गाड़ी स्टार्ट करके झटका मारकर सिर्फ 2 मिनट में ATM उखाड़ कर फुर्र हो गए ।अब्दुल मतीन, तंजीम, हिफजुर रहमान, जुबैर खान,… pic.twitter.com/wzUAWmdpBw
— TANVIR RANGREZ (@virjust18) December 9, 2025
இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், 600க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளையும், 400க்கும் அதிகமான மொபைல் எண்களின் அழைப்பு விவரங்களையும் ஆய்வு செய்தனர். விசாரணையின் பலனாக, இச்சம்பவம் தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த கும்பல் என சந்தேகிக்கப்படும் ஐந்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையின் போது, கொள்ளையர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த என்கவுன்டரில், முக்கிய குற்றவாளிகளான தஞ்சிம் மற்றும் மதீம் ஆகிய இருவர் காலில் சுடப்பட்டு காயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குற்றவாளிகளிடமிருந்து 3 லட்சம் ரொக்கம், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார், துப்பாக்கிகள் மற்றும் பர்தா ஆடைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம், நகரின் மையப்பகுதியிலுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள போலீசார் தொடர்ந்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
