சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் கூறியதாவது, இப்போது இருக்கிற அரசியல் வேற மாதிரி இருக்கு. எல்லாமே பணம்தான். அரசியல் கட்சியிலிருந்து எனக்கு மிகப்பெரிய பதவி தேடி வந்தது. ஆனால் அது எனக்கு தேவை இல்லை, வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.நாம நடக்கிற தப்பை தட்டிக் கேட்கணும் என்றுதான் வருகிறோம். ஆனால் அது நடக்காது. உங்க மேலதிகாரி சொல்றதுதான் நீங்கள் செய்யணும். அவருக்கு ஜிங்ஜக் போடணும். அது என்னால முடியாது.
பணம் இருந்தால்தான் அரசியலில் ஜெயிக்க முடியும். அந்த அளவுக்கு என்கிட்ட பணம் இல்ல. அரசியலில் இருக்க வேற ஒரு மனநிலை வேண்டும். நீங்கள் அரசியலுக்கு வந்துட்டால் உங்களை வம்புக்கு இழுப்பாங்க. உங்க குடும்பத்தை இழுப்பாங்க. கேவலமா என்ன வேண்டும் என்றாலும் பேசுவாங்க. அது தினமும் நடக்கும். ஆனால் நாம ஒண்ணுமே பண்ண முடியாது. இது தேவையா நமக்கு என்றுதான் நான் அரசியலுக்கு வராமல் ஒதுங்கிவிட்டேன் என்று நடிகர் அர்ஜூன் அதில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
