“ஐயோ என்ன விட்டுருங்க ப்ளீஸ்”… 15 வயது சிறுமியை மாறி மாறி 52 வயது முதியவரும், 16 வயது சிறுவனும் செய்த கொடூரம்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on மார்கழி 9, 2025

Spread the love

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராய வேலூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்த சிறுமியிடம் அதே ஊரை சேர்ந்த 52 வயதாகும் பிச்சமணி என்ற நபர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை தன்னுடைய வலையில் விழ வைத்து பலமுறை பாலியல் உறவு கொண்டதாக தெரிகிறது. இதனிடையே இருவரும் தனியாக இருந்ததை அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய செல்போனில் படம் பிடித்ததாகவும் தன் ஆசைப்படி நடக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாகவும் கூறி சிறுமியை மிரட்டி அடிபணிய வைத்துள்ளார். பிறகு அந்த சிறுவனும் சிறுமியுடன் பலமுறை உறவு கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுமியின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனைக் கேட்டு சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்த நிலையில் இது குறித்து மகளிடம் விசாரித்த போது நடந்த அனைத்தையும் விவரமாக கூறியுள்ளார். இதனைக் கேட்டு மனம் உடைந்த தாயார் உடனே போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றி உறவு வைத்த பிச்சை மணியையும் சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சிறுவனையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.