விஜய் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…! இரவோடு இரவாக கழட்டப்பட்ட ஜனநாயகன் பேனர்… மொத்த பணமும் வேஸ்ட்…!!

By Soundarya on மார்கழி 8, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய்  நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜனநாயகன். இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. அரசியல் களத்தில் பரபரப்பாக உள்ள நடிகர் விஜய் ஜனநாயகன் படத்துடன் சினிமாவை விட்டு விலகுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். அதனால் இதுதான் அவரது கடைசி படமாக இருக்கும். இந்த படத்தில் விஜய் நடிக்க 275 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. முன்னதாக படத்தின் தளபதி  கச்சேரி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சத்தியம் தியேட்டர் பார்க்கிங்கில் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்த ஜனநாயகன் பேனரை இரவோடு இரவாக கழட்டியுள்ளார்களாம். ஏனெனில் இந்த படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமத்தை தான் தான் வாங்குவேன் என்று ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் நினைத்து பேனருக்கு பணத்தை கட்டிவிட்டாராம். இதற்கு மாதம் ஆறரை லட்சம் ரூபாய் வாடகையாம். இந்த பேனரின் செலவே 1 1/2 லட்சமாம். ஆனால் திடீரென்று இந்த படத்தின் தியேட்டரிக்கல் உரிமத்தை வேறு கைமாறி விட்டதால் அதை கழட்டிவிட்டாராம்.