புதுச்சேரிக்கு தமிழக தவெக தொண்டர்கள் வரக்கூடாது… காவல்துறை எச்சரிக்கை…!!

By Soundarya on மார்கழி 8, 2025

Spread the love

முன்னதாக புதுச்சேரியில் TVK  சார்பில் கோரப்பட்ட பேரணிக்கு (roadshow) அனுமதி மறுக்கப்பட்டு, திறந்தவெளி பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி நடைபெறும் உப்பளம் துறைமுக மைதானத்தில், நபர்கள் உள்ளே வராமல் தடுக்க 10 அடி உயரத் தகரத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விஜய் பங்கேற்கும் தமிழக வெற்றிக் கழகப் பொதுக்கூட்டத்திற்கு, பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, காவல்துறை பல கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

நடிகர் விஜய்பள்ளி நேரம் தொடங்கிய பின்னரே (காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணிக்குள்) நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வரவேண்டும். மேலும், பள்ளி முடிவதற்கு முன்பே நிகழ்ச்சியை முடித்துவிட வேண்டும். சுமார் 5,000 புதுச்சேரி மக்களுக்கு மட்டுமே QR குறியீடு (QR code) பாஸ் மூலம் அனுமதி வழங்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வருவதைத் தடுக்க தமிழக காவல்துறையின் உதவியை நாடியுள்ளதாகவும், பாஸ் உள்ள புதுச்சேரி மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் முயற்சி செய்ய வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கூட்டத்திற்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.