திமுக ஆட்சியில் ரூ.1,020,00,00,000 ஊழல்…. கே.என்.நேரு அடித்த கொள்ளை.. புட்டு புட்டு வைத்த எடப்பாடி..!!

By Soundarya on மார்கழி 8, 2025

Spread the love
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கீடுகளில் சுமார் ரூ.1,020 கோடி ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், டெண்டர் ஊழல் குறித்து அமலாக்கத்துறை (Enforcement Directorate – ED), தமிழக பொறுப்பு டி.ஜி.பி-க்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அமைச்சர் கே.என்.நேரு தனது உறவினர்கள் மூலம் டெண்டர் கமிஷனாக 7.5% முதல் 10% வரை “கொள்ளை” அடித்துள்ளார் என்றும், இந்த விவரங்கள் அமலாக்கத்துறையின் விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.