கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு வீட்டு மனை பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை உள்ளிட்ட உதவிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கி உள்ளார். அதன்படி லாவண்யாவிற்கு ரூ.2.5 லட்சம் மதிப்பில் வீட்டு மனை. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ரூ.3.55 லட்சம் மதிப்பில் வீடு. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.
ரிஷிகா மற்றும் அபினேஷ்-க்கு அன்புக்கரங்கள் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.2,000 நிதி உதவி அளிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. ரீணாவிற்கு திறன் அழகு கலை பயிற்சி பெறுவதற்கான ரூ.6,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.
