இந்தியா முழுவதும் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை பெற்ற நட்சத்திர வீரர் விராத் கோலி. டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராத் கோலி இப்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் மட்டும்தான் விளையாடி வருகிறார். வரும் 2027ம் ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பை வரை விராத் கோலி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இரண்டு சதம், ஒரு அரை சதம் அடித்த விராத் கோலி தொடர் நாயகன் விருதை விருது வென்று தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்த நிலையில் அங்குள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு சென்று விராத் கோலி சுவாமி தரிசனம் செய்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.
