பிரபல வங்காளத் திரைப்பட நடிகர் கல்யாண் சாட்டர்ஜி (81) டைஃபாய்டு காய்ச்சலின் காரணமாக கொல்கத்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.7) காலமானார். 1968-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவர், சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், சத்யஜித் ரேயின் ‘பிரதித்வந்தி’, சுஜோய் கோஷின் ‘கஹானி’ போன்ற முக்கிய படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
