தமிழக அரசு பொதுமக்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலமாக எளிதாக கடன் பெறுவதை உறுதி செய்யும் விதமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான நடவடிக்கை தடுப்பு சட்ட விதிகளை உருவாக்கி அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்த சட்டம் தமிழக சட்டப்பேரவையில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த சட்டத்தில் உள்ள விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் ஒரு முக்கியமான திட்டமாகும்.
புதிய விதிகளின்படி கடன் வழங்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு நிதி ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையையும் செப்டம்பர் 30-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக நியமிக்கப்பட்ட போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பதிவுகள் குறைந்தபட்சம் எட்டு வருடங்களுக்கு பராமரிக்கப்பட வேண்டும். இது கடன் நடவடிக்கைகளை சிறப்பாக கண்காணிக்கும். வெளிப்படை தன்மையை மேம்படுத்தவும் உதவும். குறிப்பாக தனிநபர்களுக்கு 4 தச்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு பொதுமக்களிடமிருந்து பிணயம் எதுவும் பெறக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் வரை கடன்களுக்கு பிணையும் எதுவும் பெறக் கூடாது.
இதன் மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுவது மிகவும் எளிதாகி விட்டது. மகளிர் சுய உதவி குழுக்களில் கடன் பெற அந்த குழு ஆறு மாதங்கள் செயல்பாட்டில் இருக்க வேண்டும். 18 முதல் 70 வயது உடைய பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்கள் ஆகியோருக்கு இந்த குழுக்களில் கடன் பெற முன்னுரிமை வழங்கப்படும். வியாபாரம் அல்லது வேறு தொழில்களை தொடங்க விரும்பும் பெண்கள் சுய உதவி குழுக்களில் உறுப்பினராக சேர்ந்து குறைந்த வட்டியில் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
