மலையிலிருந்து 800 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்… ஒரே குடும்பத்தில் 6 பேர் பலியான சோகம்..!!

By Soundarya on மார்கழி 8, 2025

Spread the love
மகாராஷ்டிராவில்  மலைப்பாதையில் சென்ற டொயோட்டா இன்னோவா  கார், நேற்று   பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பவாரி நீர்வீழ்ச்சி அருகே மலைப்பாதையில் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் 800 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இறந்தவர்கள் கீர்த்தி படேல் (50), ரசிலா படேல் (50), விட்டல் படேல் (65), லதா படேல் (60), வச்சன் படேல் (60) மற்றும் மணிபென் படேல் (70) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அவர்களது சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சப்தஷ்ருங்கி மாதா கோயிலை நோக்கி கார் சென்று கொண்டிருந்தபோது, ​​பவாரி நீர்வீழ்ச்சி அருகே முந்திச் செல்ல முயன்றபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.