இந்தியாவில் தற்போது UPI பணப்பரிவர்த்தனைகளை நம்ப முடியாத அளவுக்கு எளிதாகி விட்டது. இன்று பெரும்பாலான மக்கள் பணத்தை எடுத்து செல்வதற்கு பதிலாக தங்களுடைய மொபைல் ஃபோன்களை பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர். இருந்தாலும் சில நேரங்களில் நெட்வொர்க் சிக்னல்கள் அல்லது வங்கி சேவையாகும் செயலிழப்பதால் UPI பரிவர்த்தனைகள் தோல்வியடைகின்றன.
இணைய இணைப்பு இல்லாமல் UPI செயலிகளை பயன்படுத்தி தற்போது பணம் அனுப்ப முடியும். USSD என்ற சேவையை பயன்படுத்தி இணைய இணைப்பு இல்லாமல் ஆஃப்லைன் மூலம் பணம் செலுத்தலாம். ஆஃப்லைன் மூலம் பணம் செலுத்த உங்கள் மொபைல் எண் உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட வேண்டும். பிறகு உங்கள் வங்கியின் செயலி அல்லது வலைத்தளம் மூலம் UPI பின்னை அமைக்கவும். இந்த செயல்முறை முடிந்ததும் நீங்கள் எளிதாக ஆஃப்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
அதற்கு முதலில் உங்கள் மொபைலில் *99#என டைப் செய்து அழைப்பு பட்டனை அழுத்தவும்.
திரையில் ஒரு மெனு திறக்கும். அதில் பணம் அனுப்பு, இருப்பை சரிபார்க்கவும், பணத்தை கோரவும் போன்ற விருப்பங்கள் தெரியும்.
இப்போது நீங்கள் பணம் செலுத்த விரும்பும் வங்கி கணக்கை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புவர்களின் மொபைல் எண், UPI ஐடி அல்லது வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டை உள்ளிட வேண்டும்.
நீங்கள் அனுப்பும் தொகையை டைப் செய்து இறுதியாக உங்களுடைய UPI பின்னை உள்ளிட வேண்டும்.
உங்கள் பணம் செலுத்துதல் சில நொடிகளில் வெற்றிகரமாக முடிந்து விடும். அதுவும் இணைய இணைப்பு இல்லாமல் ஆஃப்லைன் மூலமாக இதனை முடித்து விடலாம்.
இந்த சேவையின் மூலம் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் பரிவர்த்தனை செய்ய முடியும்.
