நீண்ட நேரமாக பூட்டிக் கிடந்த வீடு… கதவை உடைத்த போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… அம்மாவோடு சடலமாக கிடந்த மகன்…!

By Nanthini on மார்கழி 8, 2025

Spread the love

உத்திரபிரதேச மாநிலம் கௌஷாம்பி மாவட்டத்தில் உள்ள பாரா ஹாவேலி கிராமத்தை சேர்ந்த விஜய் மிஸ்ரா (55) என்பவருக்கு 75 வயதான மாலாதேவி என்ற தாய் இருந்துள்ளார். தனது தாயுடன் அவர் ஒன்றாக வசித்து வந்தார். இப்படியான நிலையில் இவர்களுடைய வீடு நேற்று உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படாததால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது விஜய் மிஸ்ராவும் அவருடைய தாயாரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவர்களுடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் உயிரிழப்பிற்கு முன்பு இருவரும் வாந்தி எடுத்ததற்கான அறிகுறிகள் வீட்டில் இருந்து உள்ளது. இருவரும் விஷம் மருந்திய தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.