காலையிலேயே மாணவர்களுக்கு குட் நியூஸ்… அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… அரசு அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 8, 2025

Spread the love

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான விடுமுறை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அனைவருக்கும் டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கிய டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி அன்று மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவடையும் நிலையில் இதனை தொடர்ந்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் விடுமுறையாகும்.

இதனிடையே தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடத்தப்படும் நிலையில் மூன்றாம் பருவ தேர்வுகள் டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கிய டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை பள்ளிகள் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாகும்.