இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் 47வது படம் – படபூஜையுடன் இன்று படப்பிடிப்பு துவங்கியது!

By Elango on மார்கழி 7, 2025

Spread the love

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான கருப்பு படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இப்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தனது 47வது படத்தின் நடிக்கிறார். இந்த படத்தில் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சிங்கம் படத்துக்கு பிறகு போலீஸ் அதிகாரி வேடத்தில் இந்த படத்தில் சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் என 2 மொழிகளில் ஒரே நேரத்தில் சூர்யா 47 படமாக்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. சென்னையில் நடந்த இந்த படத்தின் துவக்க விழா பூஜையில் நடிகர் சூர்யா, நடிகை நஸ்ரியா நசீம், இயக்குனர் ஜித்து மாதவன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.