தனது காதல் மனைவி சமந்தாவுக்கு பரிசளித்த அவரது 2வது கணவர் ராஜ் நெடிமூர் – ஆனா இதுல கொஞ்சம் வில்லத்தனமும் இருக்குதே?

By Elango on மார்கழி 7, 2025

Spread the love

தனது முதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நடிகை சமந்தா, சமீபத்தில் டைரக்டர் ராஜ் நெடிமூரை 2வது திருமணம் செய்து கொண்டார். ராஜ் நெடிமூரும் ஏற்கனவே திருமணமாகி தனது மனைவியை பிரிந்தவர். கடந்த 1ம் தேதி கோவையில் உள்ள ஈஷா மையத்தில் லிங்கபைரவி கோயிலில் இவர்களது திருமணம் மிக எளிமையாக நடந்தது. திருமணம் முடிந்த கையோடு தனது அன்பு மனைவி சமந்தாவுக்கு ராஜ் நெடிமூர் விலை உயர்ந்த வைர மோதிரம் ஒன்றை பரிசளித்திருக்கிறார்.

மேலும் மும்பையில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 65 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு சொகுசு பங்களாவை ராஜ் நெடிமூர், அன்பு மனைவி சமந்தாவுக்கு பரிசாக வாங்கி கொடுத்திருக்கிறார். சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் அந்த ஏரியாவில் தனது 2வது மனைவி சோபிதா துலிபாலாவுடன் வசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.