தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… அரசு பேருந்து கோர விபத்து…. 20 பேரின் நிலை….!

By Nanthini on மார்கழி 7, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பேருந்து விபத்து என்பது அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது தென்காசியில் பேருந்து விபத்தில் ஏழு பேர் பலியான சோகம் மறைவதற்குள் மன்னார்குடி அருகே அரசு பேருந்து விபத்துக்குள்ளாகி அப்பளம் போல நொறுங்கியுள்ளது. அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.