வடக்கு கோவாவில் உள்ள அப்போரா பகுதியில் அமைந்துள்ள கடற்கரையோர நைட் கிளப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிக வந்து செல்லும் மாநிலங்களில் ஒன்றான கோவா அரபிக் கடலோரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வடக்கு கோவாவின் அப்போரா பகுதியில் அமைந்துள்ள இரவு நேர விடுதி ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் மொத்த மூன்று பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விடுதியில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் மூன்று முதல் நான்கு பேர் சுற்றுலாப் பயணிகள் என்றும் மற்றவர்கள் விடுதியில் சமையலறையில் பணியில் இருந்தவர்கள் என்றும் கோவா முதல்வர் தெரிவித்துள்ளார். 20 பேர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த விபத்து குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Most clear video of the Goa Fire Incident
Within 40 seconds the fire spread into wild fire
Now we will find all the loopholes, illegal permissions & corruption
After we lost precious lives
Terrible pic.twitter.com/LKlXNB4rHh
— Flt Lt Anoop Verma (Retd.) 🇮🇳 (@FltLtAnoopVerma) December 7, 2025
