பீகாரை தொடர்ந்து தமிழகம், மேற்குவங்கம், கேரளா, உத்தரப்பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளானது நடந்து வருகிறது. ஒவ்வொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம். பொதுவாக கிராமங்களில் இருந்து நகர்புறத்திற்கு மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருவதால் வாக்காளர் விவரத்தில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் இந்த சரிபார்ப்பானது மிகவும் அவசியமான ஒன்றாகிறது. எஸ்ஐஆர் பணியானது நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதியோட முடிவடையும் என்று சொல்லப்பட்டது. ஆனால் மழை உள்ளிட்ட காரணத்தால் பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் SIR படிவம் அளித்த வாக்காளர்கள், தங்கள் படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டதா? என்பதை சரிபார்ப்பது அவசியம். இதற்கு electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள 10 இலக்க எண் கொடுத்து அறிந்து கொள்ளலாம். பெயர் வரவில்லை என்றால், உடனடியாகத் தங்கள் பகுதி BLO-வை தொடர்பு கொண்டு படிவத்தைப் பதிவேற்றம் செய்யுமாறு வலியுறுத்தலாம்.
