ஐயோ நெஞ்சே பதறுது… கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார்… 10 பேர் துடி துடித்து பலி… நொடி பொழுதில் நடந்த துயரம்…!

By Nanthini on மார்கழி 6, 2025

Spread the love

பிரான்ஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட குவாடலூப் தீவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்குள்ள தேவாலயத்திற்கு எதிரே உள்ள பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக கூட்டத்திற்குள் கார் ஒன்று அதிவேகமாக புகுந்தது. இதனால் மக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 10 பேர் பலியானார்கள். 9 பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் மூன்று பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் கார் ஓட்டிய டிரைவரை தேடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நடந்த இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.