என்ன கொடுமை சார் இது?… “கணவர்கள் வாடகைக்கு”… 100 ஆண்களுக்கு 116 பெண்கள்…. வைரலாகும் புதிய கலாச்சாரம்…!

By Nanthini on மார்கழி 5, 2025

Spread the love

கிழக்கு ஐரோப்பிய நாடான லாட்வியா கடுமையான பாலின ஏற்றத்தாழ்வை எதிர்கொண்டு வருகின்றது. மக்கள் தொகையின் தகவலின் படி அங்கு ஆண்களை விட 15.5 சதவீதம் பெண்கள்தான் அதிகமாக உள்ளனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும். குறிப்பாக 65 வயதை தாண்டியவர்களில் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காகவே உள்ளது. இந்த ஆண்களின் பற்றாக்குறை லாட்விய பெண்களின் அன்றாட வாழ்க்கையிலும் வேலை தளங்களிலும் எதிரொலிக்கின்றது. ஆண்களின் துணை இல்லாமல் அன்றாட வீட்டு தேவைகளையும் பழுதுபார்க்கும் பணிகளையும் சமாளிக்க அங்குள்ள பெண்கள் தற்போது பணியாட்களை வாடகைக்கு அமர்த்தும் சேவைகளை நாடி உள்ளனர்.

Komanda 24 என்ற இணையத்தளங்கள் ஆண்களை வாடகைக்கு அனுப்பும் சேவையை வழங்குகின்றது. இவர்கள் வீட்டு வேலைகளில் உதவுகிறார்கள். அதேசமயம் Remontdarbi.Iv என்ற மற்றொரு சேவை பெண்கள் ஒரு மணி நேரத்திற்கான கணவன் என்ற சேவையை ஆன்லைன் அல்லது தொலைபேசி மூலம் பதிவு செய்ய அனுமதிக்கின்றது. இந்த ஊழியர்கள் வாடகைக்கு எடுக்கும் பெண்கள் செய்ய சொல்லும் வேலைகளை செய்து முடிக்கிறார்கள். லாட்வியா நாட்டில் நூறு ஆண்களுக்கு 116 பெண்கள் உள்ளனர். ஆண்களில் பெரும்பாலானவர்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பதால் இளம் பெண்களுக்கு ஏற்ற ஜோடிகள் கிடைக்காமல் பெரும் அவதிப்படுகிறார்கள். இதனால் கணவர்களை வாடகைக்கு வாங்கும் கலாச்சாரம் அங்கு அதிகரித்துள்ளது.