Tiruvannamalai

திருவண்ணாமலையில் உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம்… தரிசனம் செய்ய பக்தர்களுக்கு இத்தனை நாட்கள் அவகாசமா?

By Elango on மார்கழி 5, 2025

Spread the love

நினைத்தவுடன் முக்தி தரும் சிறப்பு ஆன்மிக தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில். அக்னி வடிவில் இங்குள்ள சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களில் முதன்மையானதாக அண்ணாமலையார் போற்றப்படுகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 3ம் தேதி மாலை மகாதீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சி தரும்.

தினமும் மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் மகா தீபம், மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகா தீபத்தை வருகிற 13ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 11 நாட்கள் நிறைவடைந்த பிறகு தீப கொப்பரை மலையிலிருந்து கீழே எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதையடுத்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்படும். ஆருத்ரா தரிசன நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிட்ட பின்பு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.