விமான நிறுவனங்களுக்கான புதிய விதிகளை DGCA வாபஸ் பெற்றுள்ளது. நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. விமானி பாரத்திற்கு இரண்டு நாட்கள் ஓய்வு பெறலாம். ஒரு இரவில் இரண்டு விமானத்தை மட்டுமே விமானி தரையிறக்க வேண்டும் என்ற விதிகளை DGCA அண்மையில் அமல்படுத்தியது. இதனால் இண்டிகோ நிறுவனத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
