என் கழுத்தை அறுத்து போட்டாலும் சரி… SIR எதிர்ப்பு பேரணியில் மம்தா பானர்ஜி ஆவேசம்..!!

By Soundarya on மார்கழி 5, 2025

Spread the love

பீகாரை தொடர்ந்து தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம் உட்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அவசரகதியில் செய்யப்படுவதால் படிவத்தை விநியோகித்து திரும்ப பெற்று, பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடியை நிலை  அலுவலர்கள் பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில்  எஸ்ஐஆர் எதிர்ப்பு பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, பாஜக எஸ்ஐஆர்-ஐ வைத்து மத அரசியலில் ஈடுபடுகிறது. ஆனால் இது தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்துக்கள்.

எனவே நீங்கள் அமர்ந்திருக்கும் கிளையை வெட்ட வேண்டாம். என் கழுத்தை அறுத்தாலும் சரி இங்கிருந்து யாரும் விரட்டப்பட மாட்டார்கள். மேற்குவங்கம் அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான மாநிலமாக இருக்கும். மேலும் வக்பு சொத்துக்கள் எதுவும் ஆக்கிரமிக்கப்படாது என்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்னுடைய பொறுப்பு என்றும் உறுதி அளிக்கிறேன். நான் இன்னும் எஸ் ஐ ஆர் படிவத்தை பூர்த்தி செய்யவில்லை .உங்கள் அனைவரின் பெயர்களும் சேர்க்கப்பட்ட பின்னே நான் அதை செய்வேன். எஸ்ஐஆர் படிவத்தை நிரப்ப உதவ ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் உதவி முகாம்களை அமைக்க நான் உத்தரவிட்டேன் என்று கூறியுள்ளார்.