பீகாரின் புத்தகயா பகுதியில் ரசகுல்லா பற்றாக்குறையால் திருமணம் என்று போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 29ஆம் தேதி அன்று புத்த கயாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்த நிலையில் ரசகுல்லா தீர்ந்து போனதாக பெண் வீட்டார் பிரச்சனையை தொடங்கியுள்ளன. முதலில் சாதாரணமாக தொடங்கிய இந்த பிரச்சனை மோதலாக மாற இருதரப்பினரும் அங்கிருந்த நாற்காலி மற்றும் தட்டி என கையில் கிடைத்ததை வைத்து மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் பலரும் காயம் அடைந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மணமகலின் குடும்பத்தினர் பொய்யான வரதட்சணை வழக்கை பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர். சண்டை நடந்து கொண்டிருக்கும்போது மணமகளுக்கு பரிசளிக்க கொண்டு வந்த நகைகளையும் மணமகளின் குடும்பத்தினர் எடுத்துச் சென்றதாக மணமகனின் தாயார் குற்றம் சாட்டினார். மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தை தொடர ஒப்புக்கொண்டாலும் மணமகளின் குடும்பத்தினர் மறுத்ததாக கூறப்படுகிறது. ஒரு ரசகுல்லாவால் திருமணமே நின்று போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Chaos After ‘Rasgulla Shortage’ At Bihar Wedding pic.twitter.com/Rks41zJtnq
— Priyanka Koul (@Priyankakaul13) December 3, 2025
