“மதிய உணவுக்கு வெளியே போக மறுப்பு தெரிவித்த கணவன்”… அடுத்த நொடியே தூக்கில் தொங்கிய 23 வயது பெண்… திருமணமான மூன்றே மாதத்தில் நடந்த சோகம்…!

By Nanthini on மார்கழி 5, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆந்திராஹல்லி பகுதியில் உள்ள காமிகன்யா நகரில் வசித்து வரும் அபிஷேக் என்பவரும் அமுல்யா (23) என்ற பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அமுல்யா திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே அமுல்யாவின் பெற்றோர் தங்கள் மகள் சாவுக்கு அபிஷேக் தான் காரணம் என்று புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேசமயம் போலீசார் நடத்திய விசாரணையில் மதிய உணவுக்கு வெளியே செல்வது தொடர்பாக தம்பதியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனால் மனமுடைந்த அமுல்யா தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருந்தாலும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அபிஷேக்கை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.