அதிமுகவின் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ் வருகின்ற சட்டசபை தேர்தலுக்காக அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் ஓபிஎஸ்ஐ பாஜக மேலிடம் கண்டு கொள்ளவில்லை. எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸ்ஐ அதிமுகவில் சேர்க்க முடியாது என்ற திட்டவட்டமாக கூறிவிட்டார். சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் முயற்சி செய்தோம் அவரை பார்ப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் உடன் நெருக்கம் காட்டிய நிலையில் அவரை தொடர்ந்து இரண்டு முறை சந்தித்து பேசினார். இதனால் திமுகவில் இணைய போகிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் விஜய் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாற்றினார்.
அதன்பிறகு கடந்த ஒரு வாரமாக கோவையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த ஓபிஎஸ் நேற்று திடீர் பயணமாக டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஓபிஎஸ் அமித்ஷாவை சந்தித்தார். அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறினார். ய்விட்டார். அவரைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று ஓபிஎஸ் கூறினார்.
இந்த நிலையில் ஓபிஎஸ் அமித்ஷாவை சந்தித்து பேசியது குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது ஓபிஎஸ் அமித்ஷாவிடம், அதிமுகவில் நான் மீண்டும் இணைய நீங்கள் உதவ வேண்டும் என்றும் அதில் எனக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்றோம் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிகிறது. என்ன ஆனாலும் வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்று பிடிவாதமாக இருக்கும் ஈபிஎஸ் இதனை எப்படி ஏற்றுக் கொள்வார் என்பது தற்போதைய கேள்வியாகவே உள்ளது. மேலும் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக மீண்டும் மீண்டும் தலையிடுவது அதிமுக மற்றும் பாஜகவின் கைப்பாயாக உள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
